எபேசியர் 6 : 12-16                                06 செப்டம்பர் 2022, செவ்வாய்

“கடவுளின் சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.” – எபேசியர் 6 : 13b

எப்போதுமே நாம் சுய சார்புடையவர்களாகவே இருக்க ஆசைப்படுவோம். அநேகமாக நம்மை நாம் கவனித்துக் கொள்வதே நமது எண்ணமாக உள்ளது. ஆனால் இன்றைக்கான நமது தியானத்துக்கு ஆதாரமான ஞானப்பாடல் `எல்லா வேளைகளிலும், நாம் நம்பிக்கை வைத்திருக்கிற நமது வலிமை நம்மை வெற்றி பெறச் செய்யாது என்ற உண்மையைக் கூறுகிறது.’ அந்தகாரத்தின் அதிபதிகளோடும் நமக்குப் போராட்டம் உண்டென்று பவுல் கூறுகிறார். நம்முடைய இரட்சகரிடமிருந்து நம்மைப் பிரிக்க `பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் சுற்றித் திரிகிறான்’ என்று பேதுரு கூறுகிறார். ஆனால் இந்தப் போரில் நாம் பெலனற்றவர்களாக விட்டு விடப்படவில்லை. சுவிசேஷம் என்னும் சர்வாயுதம், ஜெபம் எனும் ஆயுதம் நம்மிடம் உள்ளது.

இவ்வுலக வாழ்வில் நாம் சந்திக்கும் போராட்டங்களில், குடும்பங்களுக்கிடையேயான சண்டை சச்சரவுகளில், உடன் பணியாட்கள் மற்றும் நண்பர்களோடு இதில் எதுவானாலும் இவற்றில் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பது யாராலும் தீர்மானிப்பது சுலபமல்ல. ஆனால் பாவத்தோடும், சாத்தானோடும் உள்ள நமது போராட்டத்தின் முடிவு என்ன என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு இதின்மேல் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டார். சிலுவையில் அவர் அடைந்த மரணத்தின் மூலம் `மரணத்தின் வல்லமையையுடைய பிசாசானவனை’ இயேசு அழித்து ஒழித்துவிட்டார். இப்போதும் அந்த போராட்டம் ஓயவில்லை, ஆனால், ‘போரின் கோஷ்டம்’ இயேசு உயிர்த்த அந்த முதல் ஈஸ்டர் தினம் காலையில் வெற்றிப்பாட்டாக ஒலித்தது. ஏனெனில் இயேசு மரணத்தை வென்று உயிர்த்துவிட்டார். போரில் இயேசு வெற்றி வாகை சூடிவிட்டார், அவர் வென்றெடுத்த ஜீவ கிரீடத்தை நமக்கும் சொந்தமாக்கித் தந்து விட்டார்.

இயேசுவின் போர்ச் சேவர்களாகிய நமக்கும் முன் செல்ல `எப்பொழுதும்’ ஜெபம் என்ற ஆயத்த அடையாளத்தைக் கொண்டிருக்க வேண்டும். கிறிஸ்து ஆண்டவராகும்படி அவரை உங்கள் இருதயங்களில் பரிசுத்தரென்று கொண்டாடுங்கள். உங்களிலிருக்கிற நன்னம்பிக்கையைப் பற்றி உங்களிடம் விசாரிக்கிற எவனுக்கும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

நமது சாட்சியிடுகிற வார்த்தை, மற்றும் அன்பின் செயல்களால், நாம் `மீட்பர் இயேசுவின் பட்சத்தில் நிற்கிறோம், சேனாதிபதி இயேசுவின் வெற்றி நமக்குப் பலம் தருகிறது. அவரது அன்பு நம் வாழ்க்கையின் வழியாக பிரகாசிக்கிறது.

என் ஆண்டவராகிய இயேசுவே, எமக்கு இரங்கும். பாவம், மரணம், பிசாசை வென்ற உமது வெற்றிக்கு உண்மையான சாட்சியாக நானும் விளங்க, உமது நாமத்தில் உறுதியாக நிற்க எனக்கு உதவி செய்யும். இயேசுவின் வழியே, ஆமேன்.