யாக்கோபு 1 : 13-15                                   12 மார்ச் 2026, வியாழன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்… ஜீவ கிரீடத்தைப் பெறுவான்.” – யாக்கோபு 1 : 12

ஒர் ஓட்டப்பந்தய வீரர் ஒரு பந்தயத்திற்கு பயிற்சி பெறுவதுபோல, நமது சோதனைகள் ஆன்மீகப் பயிற்சியின் ஒரு வடிவமாகும்.

இந்த வசனத்தில், கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய ஆழமான உண்மையை யாக்கோபு நமக்குத் தருகிறார். சோதனைகளைத் தவிர்ப்பவனும், ஒருபோதும் கஷ்டங்களை எதிர்கொள்ளாதவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று இங்கே கூறவில்லை. மாறாக, ஆசீர்வதிக்கப்பட்டவன் சோதனையில் உறுதியாயிருப்பவன் என்று உறுதியாய் கூறப்படுகிறது.

இந்த சோதனைக்கான வெகுமதி என்னவென்றால், நாம் ஜீவகிரீடத்தைப் பெறுவோம் என்று யாக்கோபு கூறுகிறார். இது நித்திய ஜீவனுக்கான வாக்குறுதி. சகித்துக்கொள்ளும் திறன் கடவுள் மீதான நம் அன்பிலிருந்து வருகிறது. மேலும், நமது சகிப்புத்தன்மை அந்த அன்பை நிரூபிக்கிறது. கடவுள் மீதான அன்பு சகித்துக்கொள்வதற்கான நமது விசுவாசத்தை பலப்படுத்துகிறது. மேலும் நமது சகிப்புத்தன்மை கடவுள் மீதான நமது அன்பின் ஆழத்தை நிரூபிக்கிறது.

மனித வாழ்க்கை சோதனைகளால் நிறைந்தது. சில சமயங்களில், இந்த சோதனைகள் நம் விசுவாசத்தை கைவிட வைக்கும். அவை நம்மை கடவுளிடம் கேள்வி கேட்க வைக்கும். ஆனால் இந்த சோதனைகள் அர்த்தமற்றவை அல்ல என்பதை யாக்கோபு கூறுகிறார். இயேசுவும் சோதிக்கப்பட்டார். ஆனால் அந்த சோதனைகளை வெற்றி கொண்டார். அதற்கு தேவ தூதர்கள் அவருக்கு பணிவிடை செய்தார்கள்.

எனவே நாம் சோதனைகளை எதிர்கொள்ளும்போது, யாக்கோபின் வார்த்தைகளை நினைவில்கொள்ள வேண்டும். மனம் தளராமல், விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, நம் கஷ்டங்களை தண்டனைகளாக அல்ல. மாறாக நம் விசுவாசத்தை நிரூபிக்கவும், கடவுள் மீதான நம் அன்பை ஆழப்படுத்தும் வாய்ப்புகளாகக் கருதி உறுதியாக இருந்தால், இறுதி வெகுமதியான ஜீவகீரிடத்தை பெறுவோம்.

அன்பின் கடவுளே! சோதனையை சகித்து வாழ்பவருக்கு ஜீவ கிரீடத்தை தருவதற்காக உமக்கு நன்றி. நாங்களும் சோதனையை சகித்து வாழ, உமது தூய ஆவியின் வழியாய் துணை புரியும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.